Spotlightசினிமா

ஆர்ப்பரிக்கும் வசூல் மழையில் “ஃபைட் க்ளப்”

விஜயகுமாரின் நடிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் இந்த “ஃபைட் க்ளப்”.

படம் வெளியானது முதல் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தொடர்ந்து, திரையிட்ட அரங்குகள் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் வெளியான மூன்று நாட்களில் மட்டும் சுமார் 5.25 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

தொடர்ந்து இளைய சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருப்பதால், இன்னும் காட்சிகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்குமார், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் என்பதாலும், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்பை எதிர்பார்த்த அளவிற்கு பூர்த்தி செய்திருக்கிறது.

கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button