Spotlightசினிமா

வருண் நடிப்பில் உருவாகும் ‘பப்பி’!

ஜெயம் ரவி நடிப்பில் உருவான போகன், விக்ரம் பிரபு நடிப்பில் உருவான நெருப்புடா, மற்றும் நைட் ஷோ ஆகிய படங்களில் நடித்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் இணை இயக்குனர் நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு நாய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘பப்பி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதிக்க இருக்கிறார் சம்யுக்தா ஹெக்டே. இயக்குனர் நட்டுதேவ் காக்கா முட்டை இணை இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு பிராணிகள் மீதான காதல் அதிகம், அதை வளர்க்கும் ஆர்வம் அதிகம். ‘பப்பி’ கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்வது. ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும். எனக்காக படங்கள் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதுவரை வெற்றிகரமான படங்களில் நான் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் வருண்.

Facebook Comments

Related Articles

Back to top button