
தமிழகம் முழுவதும் பிரேக்கிங் நியூஸாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சில தினங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில் பற்றி இவர் பேசிய பேச்சு தான் அதற்கு காரணம்.
கோவில்களுக்கு காணிக்கை செய்வது போல் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யுங்கள் என்று கூறினார் ஜோதிகா.
இவரின் இந்த பேச்சுக்கு பல இடங்களில் ஆதரவும் சில இடங்களில் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில், ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் நடிகை ஷாந்தினி .
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘ பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் குறித்த தங்களது உயர்ந்த எண்ணங்களை நாங்கள் பாராட்டுகிறோம், ஆனால் அதைவிட உங்கள் வார்த்தையில் நெருப்பு தான் அதிகமாய் உள்ளது.
கோவிலை எதனுடனும் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள், கோவில்களில் இருந்து பெறப்படும் ஆசீர்வாதம் மிகவும் விலைமதிப்பற்றது. எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் நாங்கள் நன்கொடை அளித்து வருகிறோம்.
பேச்சில் கவனம் தேவை, பேசிய வார்த்தைகள் ஒரு போதும் இறக்காது.’ என்று காட்டமாக கூறியுள்ளார் நடிகை ஷாந்தினி.
Madam Jo we appreciate ur kind thoughts on schools & hospitals, but ur words are on fire ! Never ever compare a temple, blessing from any temples are priceless, and we donated based on our wish, Be careful wit ur words ! It never dies. #jothika #surya @vijaysrig #pubgfilm pic.twitter.com/jV0UdmerSS
— @catchdrtshantini (@catchtshantini) April 27, 2020