
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் அதிக வரவேற்புடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதற்கு முதல் காரணம் நடிகர் கமல்ஹாசன் தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த 5 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். இதன் நடுவே, தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் கமல்ஹாசனுக்கும் ஏற்பட்ட விரிசல் காரணமாக 24 மணி நேர பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தொலைக்காட்சி தரப்பு கமல்ஹாசன் தரப்போடு பேச்சு வார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் சுமூக தீர்வு எட்டப்பட்ட நிலையில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.