Spotlightசினிமா

டெல்லியை முகாமிடும் விஜய்.. ஏன் தெரியுமா.??

சுமார் 20 நாட்கள் தளபதி விஜய் டெல்லியில் தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும், இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நான்காம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி துவக்கவிருக்கிறது படக்க்குழு.

டெல்லியில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு தொடர்ந்து 20 நாட்கள் அங்கு தங்குகின்றனர்.

இதற்காக இம்மாத இறுதியில் விஜய் டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button