
ஹச் வினோத் இயக்த்தில் அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக அதீத எதிர்பார்ப்புடனும் உருவாகி வரும் படம் தான் “வலிமை”.
இந்தப் படத்தினை போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
அதே நேரத்தில் வலிமை படத்தின் அறிவிப்பை தொடர்ந்து தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பப்ஜி என்ற திரைப்படமும் பொங்கலுக்கு வலிமையுடன் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நட்சத்திரங்களோடு அதிக எதிர்பார்ப்போடு உருவாகி வரும் பப்ஜி படத்திற்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
Facebook Comments





