Spotlightவிமர்சனங்கள்

குட் பேட் அக்லி – விமர்சனம் 3.5/5

மார்க் ஆண்டனி படத்தினை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், யோகிபாபு, பிரபு, ஜாக்கி ஷெராப், ப்ரியா பிரகாஷ் வாரியர், சுனில் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “Good Bad Ugly”.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு படம் என்று ஏற்கனவே இயக்குனர் கூறிவிட்டதால், இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது.

கதைக்குள் பயணித்துவிடலாம்…

மும்பையில் பிரபல கேங்ஸ்டர் ஆக இருக்கிறார் நடிகர் அஜித். திரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் அஜித். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, பிறந்த குழந்தையை காண செல்கிறார் அஜித்.

ஆனால் அந்த குழந்தையை தொடக்கூடாது என்று சொல்லி விடுகிறார் திரிஷா. அடிதடி, ரவுடிசம் அனைத்தையும் விட்டுவிட்டு வரும்படி கூறுகிறார் திரிஷா.

இதனைத் தொடர்ந்து தன் மகனுக்காகவும் தனது மனைவிக்காகவும் அனைத்தையும் துறந்து ஜெயிலுக்கு செல்கிறார் அஜித். தனது குடும்பத்திற்காக 17 வருடங்கள் சிறையில் இருக்கிறார் அஜித்குமார்.

தனது மகனை ஸ்பெயினில் வளர்த்து வருகிறார் திரிஷா. 17 வருடங்கள் கழித்து தனது மகனை காண செல்கிறார் அஜி.த் அப்போது அஜித்தின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறை செல்கிறார். இதனைப் பார்த்ததும் பேர அதிர்ச்சி ஆகிறார் அஜித்.

தனது மகனை யாரோ வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என்பதை கண்டறிகிறார் அஜித். தனது மகனை எப்படி சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தார் இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் உள்ளார் என்பதை அஜித் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை படத்தின் மீதி கதை.

பல வருடங்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க மாஸ் காட்சிகளில் மட்டுமே தோன்றி ரசிகர்களை வெறி ஏற்றியிருக்கிறார் அஜித்குமார். இதுவரை அவரது ரசிகர்களே பார்க்காத ஒரு முரட்டு சம்பவமாக இப்படத்தில் நடித்து மிரள வைத்திருக்கிறார் அஜித்.

இதுவரை எந்த படத்திலும் பார்க்காத ஒரு அஜித்தை இந்த படத்தில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். ஆங்காங்கே மாஸ் காட்சிகள் வைத்து தான் பார்த்திருக்கிறோம். ஆனால், மாஸ் காட்சிகளுக்கென்றே ஒரு படம் இருக்கும் என்றால் அது இந்த படம் தான்.

ரசிகர்களை சீட்டில் அமர விடாமல் துள்ளிக் குதிக்க வைக்கும் ஒரு தரமான சம்பவத்தைத் தான் செய்திருக்கிறார் இயக்குனர். தான் ஒரு அக்மார்க் அஜித் ரசிகன் என்பதை ஒவ்வொரு ப்ரேமிலும் காட்டியிருக்கிறார் அஜித்குமார். அதிலும், அஜித்தின் எண்ட்ரீ காட்சிக்கென்று அப்படியான மெனக்கெடல் எந்த படத்திலும் பார்த்திட முடியாது.

படத்தில் அஜித்குமாரின் காஸ்ட்யூமில் ஆரம்பித்து அவருக்கென்று ஒவ்வொன்றையும் தேடி தேடி எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு ப்யூர் அஜித் ரசிகர் எப்படியாக அஜித்தை திரையில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பாரோ அப்படியாக அஜித்தை திரையில் ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர் ஆதிக்.

ஒரு சில காட்சிகள் என்றாலும், அக்காட்சியில் தன்னால் என்ன முடியுமோ அதை தரமாக செய்து முடித்திருக்கிறார் த்ரிஷா. காட்சிகளில் அழகு தேவதையாகவும் வந்து செல்கிறார்.

வில்லனாக அர்ஜூன் தாஸ் தனது கேரக்டருக்கு ஞாயம் சேர்த்திருக்கிறார் இருந்தாலும் அஜித்திற்கான வில்லனா என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.

பிரசன்னா மற்றும் சுனில் இருவரும் ஆங்காங்கே வந்து செல்லும் காட்சி தான். தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக செய்திருக்கின்றனர் இருவரும்.

சிறப்புத் தோற்றத்தில் வந்த சிம்ரன், அழகால் ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு காட்சி என்றாலும் அதிலும் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார் யோகிபாபு.

பல ரீமேக் பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கின்றன. படத்தின் பிஜிஎம் இன்னும் சற்றும் ஜி வி பிரகாஷ் மெனக்கெடல் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. . இருந்தாலும், இந்த படத்தில் தனக்கென்று ஒரு யூனிக் மியூசிக்கை கொடுக்கத் தவறியிருக்கிறார் ஜி வி பிரகாஷ்.

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு அலப்பறை காட்டியுள்ளது. வெளிச்சத்தை நன்கு பயன்படுத்தி காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார். கேமராவை நாலாபுறமும் சுழல விட்டு அஜித்தை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் ஒளிப்பதிவாளர்.

பிரசன்னா இப்படத்தில் நடித்திருக்கிறார். பெரிதான ஸ்கோர் செய்ய படத்தில் இடம் கொடுக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும். சிறப்புத் தோற்றத்தில் வந்த சிம்ரன், அழகை அழகூட்டி காட்டியிருக்கிறார்.

ஒரு ப்யூர் பேன் பாயாக மாறி படத்தினை இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். சீரியஸாக செல்லும் காட்சியில் ஆங்காங்கே காமெடி காட்சிகளை வைத்துவிட்டதால், கதைக்கான சீரியஸ்னசை நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

பலமுறை பார்க்க சொன்னாலும் அஜித்தின் ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பார்கள் என்பதை அழுத்தமாகவே கூறலாம்.

மொத்தத்தில்,

குட் பேட் அக்லி – Pure Fan Boy Movie

Facebook Comments

Related Articles

Back to top button