
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தான் ‘மாஸ்டர்’. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஜான் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், அசுரன் படத்தினை தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்., இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், வாடிவாசல் படத்தினை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் முதலில் இக்கதையை விஜய்யிடம் எடுத்துச் சென்றாராம்.
விஜய்யின் மேனேஜர், வாடிவாசல் கதையை விஜய்யிடம் எடுத்துச் சென்றாரா இல்லையா..?? என்றே தெரியாத சூழலில் அக்கதையை விஜய் தரப்பு நிராகரித்து விட்டார்களாம். காரணம் என்னவென்று கேட்டால், அதில் ஹீரோயிசம் மிகவும் குறைவாக இருந்ததாக சொல்கிறார்களாம். கதை மட்டும் வெயிட்டாக இருப்பதால் அதில் நடிக்க விஜய் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் வாடிவாசல் படத்தில் நடித்திருக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் பலர் கூறிவருகின்றனர்.




