ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் வசுந்த்ரா நடிப்பில் உருவாகியுள்ளது ‘பக்ரீத்’.
இப்படத்தினை எம் எஸ் முருகராஜ் தயாரித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில், பக்ரீத் படத்தினை உதயநிதி ஸ்டாலீனி ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாட்டு வெளியீடு உரிமையை கைப்பற்றியுள்ளது.
இது, இப்படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments