Spotlightசினிமா

’கோமாளி’ படத்தில் ரஜினி குறித்த காட்சி நீக்கம் – தயாரிப்பாளர் அறிவிப்பு!

றிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், கே எஸ் ரவிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கோமாளி’. இப்படத்தினை ஐசரி வேலன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் கதைப்படி கோமாவில் இருந்த நாயகன் ஜெயம் ரவி, 16 ஆண்டுகள் கழித்து 2016ல் தான் கண் விழிக்கிறார். ஆனால், தான் கோமாவில் விழுந்ததை, நண்பர் யோகி பாபு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நம்ப மறுக்கிறார் நாயகன். இதனால், நண்பனை நம்ப வைக்க, யோகிபாபு டிவியை ஆன் செய்ய, அதில், நடிகர் ரஜினிகாந்த், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்கிறார். அதைப் பார்க்கும் ஜெயம் ரவி, ‘யார ஏமாத்த பாக்குறீங்க இது 1996ல் சொன்னது’ என்று பதில் அளிக்கிறார்.

இக்காட்சி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை படக்குழுவினருக்கு எதிராக பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேசன், ‘ ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நாங்கள் படத்தில் இருந்து நீக்கி விடுகிறோம்.’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button