
ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி மிகப்பெரும் வைரலாகி வருகிறது.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. தயாரித்திருக்கிறார் போனி கபூர். இந்நிலையில், இன்று மதுரையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் ட்ரெய்லர் வெளியிட்டு விழா ஒன்றிற்கு தல ரசிகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டு, திரையரங்கை அதிர வைத்தனர். விசில் சத்தமும் ஆக்ரோஷமும் விண்ணை பிளந்தது.
Facebook Comments




