Spotlightசினிமா

எம்.எல்.ஏ.வாக மாறும் யோகி பாபு! அக்டோபர் 30-ல் வெளியாகும் ‘சிங்காரம்’!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ள இப்படத்தை ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ளனர்.

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாறு, சமூகப் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுடன் இப்படம் பேசுகிறது.

சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இவ்விழாவில் ஆர்.வி. உதயகுமார்  கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய யோகி பாபு, இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், மறைந்த நடிகர்கள் மனோபாலா, மாரிமுத்து ஆகியோரை நினைவுகூர்ந்தார்.

இயக்குநர் கே.வி. கதிர்வேலு, நரிக்குறவர் சமூகத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து இப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும், சமூக விழிப்புணர்வுடன் குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக ‘சிங்காரம்’ இருக்கும் என்றும் தெரிவித்தார்.

யோகி பாபுவுடன் வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமூகக் கருத்துடன் நகைச்சுவையையும் இணைத்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button