
இயக்கம்: ஜெயஷதீஷன் நாகேஸ்வரன்
நடிகர்கள்: ஜெய் ஆகாஷ், அக்ஷயா, அட்சயா, ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின்
ஒளிப்பதிவு: பால் பாண்டி
இசை: சதீஷ் குமார்
கதைப்படி,
நாயகன் ஜெய் ஆகாஷ், தனது வாழ்க்கையில் நடந்ததை முழுவதுமாக மறந்து வாழ்ந்து வருகிறார். இச்சமயத்தில், ஆகாஷ் மீது கொலை பழி விழுகிறது.
ஒரு குடும்பத்தையே கொலை செய்த குற்றத்திற்காக, போலீஸ் ஜெய் ஆகாஷை பிடிக்க, தான் அந்த கொலையை செய்யவில்லை என்று கூறுகிறார்.
மேலும், தனது வாழ்க்கையில் என்ன நடந்தது என்றும் அவருக்கு ஞாபகம் இல்லை என்றும் கூறுகிறார் ஜெய் ஆகாஷ்.
இறுதியில், அந்த கொலை யார் செய்தது.? ஜெய் ஆகாஷுக்கு என்ன நடந்தது.? அவரின் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஜெய் ஆகாஷ், முழுக் கதையையும் தனி ஒருவனாக தன் தோல் மீது சுமந்து நிற்கிறார். வாழ்க்கையில் நடந்தவற்றை மறந்து செல்லும் கதாபாத்திரத்தில் ஒன்று அறியாதவராக நடித்து நன்றாகவே அந்த காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகி அக்ஷயா காட்சிக்கு அழகு தேவதையாக காட்சி தந்திருக்கிறார். காட்சியிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
கதையில் ஆங்காங்கே வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது.
பால் பாண்டியின் ஒளிப்பதிவில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
பின்னணி இசை கதையோடு பயணப்பட்டிருக்கிறது.
ஜெய் விஜயம் – சக்சஸ்…





