Spotlightசினிமா

லைகா நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் “டான்” மார்ச் 25ல் வெளியாகிறது!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டான்” திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக உருவாகியுள்ளது ‘டான்’ .

டாக்டர் படத்தின் அழகான கெமிஸ்ட்ரியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனும், பிரியங்கா அருள் மோகனும் ‘டான்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் ‘டான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவில் அனிருத் (இசை), KM.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டூனி ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J – AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இத்திரைப்படத்தினை Lyca Productions சுபாஸ்கரன் சார்பில், SK Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button