
I Creations மற்றும் PSS Productions இணைந்து வழங்கும் படம் ‘ No. 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’. என்னும் திரைப்படத்தை இயக்குனர் செ. ஹரி உத்ரா மூலம் தயாரிக்கிறது. தயாரிப்பாளராக பிரீத்தி சங்கர், உஷா , சே ஹரி உத்ரா இணைந்து தயாரிக்கின்றனர்.
இயக்குனர் செ ஹரி உத்ரா இதற்கு முன்னர் தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் மற்றும் கல்தா படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையப்படுத்திய கருத்துகளை கொண்டது. இவர் இயக்கும் ‘No 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான நிஜ கால்பந்து வீரர்கள் இத்திரைப்படத்தில் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
கதாநாயகனாக ஷரத் மற்றும் கதாநாயகியாக ஐரா நடிக்கின்றனர். அருவி புகழ் மதன், விஜய் முத்து, கஜராஜ், ஹரி, பீம்ஜி, ராசி அழகப்பன், என பலர் நடித்துள்ளனர். இசை ஏ ஜே அலிமிர்ஸாக், ஒளிப்பதிவு வினோத்ராஜா.
விளையாட்டில் எவ்வாறு அரசியல் புகுத்தப்படுகிறது என்பதை யதார்த்தமாக முழுக்க முழுக்க ஆக்ஷனாக படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் 90 சதவீதம் இரவில் கதை நடைபெறும் வகையில் ஏராளமான நடிகர்களுடன் தத்ரூபமாக மதுரை மற்றும் பரமக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.




