
கேரளாவை பூர்வீகமாக கொண்ட சமூகப் போராளிக் பி கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது எழுச்சியே வீர வணக்கம்…
கம்யூனிசம் கட்சியை நிறுவி எந்த மக்களுக்காக அவர் போராட்டத்தில் குதித்தார்.? யாரை எதிர்த்து போராட்டம் செய்தார் உள்ளிட்ட பலவற்றை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு கிராமத்தில் கம்யூனிசம் கட்சியைச் சேர்ந்த பரத், தொடர்ச்சியாக எளிய மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அப்படியாக பக்கத்து கிராமத்தில் எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, அங்கிருக்கும் சிலரை கேரளாவைச் சேர்ந்த 96 வயதுடைய கம்யூனிசகட்சியின் பெரும் போராளி பெண்மணியான பி கே மேதினியிடம் அழைத்துச் செல்கிறார் பரத்.
பி கே மேதினி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை போராட்ட வேட்கை குறித்து அம்மக்களிடம் விவரிக்கிறார்.
கதையானது ப்ளாஷ் பேக் செல்கிறது. அங்கு பி கிருஷ்ணபிள்ளையாக வருகிறார் சமுத்திரக்கனி. கம்யூனிச கட்சியை தோற்றுவித்து பெரும் முதலாளிகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுகிறார் பி கிருஷ்ணபிள்ளை.
ஏழை மக்களுக்காகவும் பாலியல் ரீதியாக தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்காகவும் தன் போராட்டத்தை வீரியமாக கம்யூனிசம் வழியாக போராடுகிறார்.
இதனால், அவருக்கு ஏற்பட்ட இன்னல்களும் அதிகம். அவை அனைத்தையும் காட்சிப்படுத்தியிருக்கின்றனர் படக்குழுவினர்.
செங்கொடி ஏந்தி போராடும் போது நம்மையும் போராட்ட களத்திற்குள் அழைத்துச் செல்லும்படியான ஒரு திரைக்கதையோடு வீர வணக்கம் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
பி கிருஷ்ணபிள்ளையின் போராட்ட குணத்தை உலகமறியச் செய்த படக்குழுவினருக்கு நன்றிகளோடு கலந்த வாழ்த்துகளும்..





