விமர்சனங்கள்

லீடர் – விமர்சனம் 3.5/5

Writer & Director : R. S. Durai Senthilkumar
Producer : Legend Saravana Stores Productions
Music: Ghibran Vaibodha
Director Of Photography: Venkatesh S
Editor : Pradeep E Ragav

Cast: Legend Saravanan, Sham, Andrea Jeremiah , Santhosh Prathap , Payal Rajput ,Lal , “Bahubali” Prabaharan , Amirtha Aiyer ,
VTV Ganesh , Iyal , Aishwarya, Mariam George , Pathmen

லெஜென்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, அனைவரிடத்திலும் பரீட்சயமானவர் நடிகரும் தொழிலதிபருமான சரவணன்.

இவரது நடிப்பில் தற்போது லீடர் என்ற படம் உருவாகி வெள்ளியன்று வெளியானது. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார்.

படத்தின் கதைக்களம் என்ன என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்..


மெக்கானிக்காக வாழும் சரவணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இந்த லீடர். தன் மகள் தான் தனக்கு உலகம் என்றெண்ணி வாழ்ந்து வரும் மனிதர் தான் சரவணன்.. தனது மகள் மீது வைத்திருக்கும் அன்பே கதையின் முதுகெலும்பாக அமைகிறது. இதனுடன் சட்டவிரோத கண்டெய்னர், தூத்துக்குடி ஹார்பர், போலீஸ் விசாரணை என திரைக்கதை மெல்ல மெல்ல த்ரில்லர் கோணத்திற்குள் நகர்கிறது.

இன்ஸ்பெக்டராக எண்ட்ரீ கொடுத்து மிரட்டியிருக்கிறார் ஆண்ட்ரியா. கதாபாத்திரமாக வரும் ஆண்ட்ரியா, கதைக்கு தேவையான உறுதியையும் தீவிரத்தையும் தருகிறார். ஆரம்பத்தில் அவர் நடத்தும் நடவடிக்கைகள் வழக்கமான போலீஸ் நாடகமாக தோன்றினாலும், பின்னர் வரும் திருப்பங்கள் கதையின் பாதையை முற்றிலும் மாற்றுகின்றன.

குறிப்பாக, சரவணனின் செயல்கள் பின்னணியில் இருக்கும் உண்மைகள் வெளிப்படும் தருணங்கள், படத்தின் முக்கிய பலமாக மாறுகின்றன. முதல் பாதியில் கதை மெதுவாக நகரும் உணர்வு இருந்தாலும், பிற்பாதியில் “சரவணன் vs சால்ட்” என மோதல் தொடங்கும் இடத்திலிருந்து படம் வேகம் பெறுகிறது.

இடைவேளைக்கு முன் வரும் திருப்பமும், கிளைமாக்ஸில் அமைந்துள்ள ட்ரெயின் சண்டைக் காட்சியும், ரசிகர்களுக்கான ‘மாஸ்’ தருணங்களாக அமைந்துள்ளன. தனது முதல் படத்தை விட அதிக நம்பிக்கையுடன் இந்த படத்தில் காட்சியளித்திருக்கிறார் சரவணன்.

குறிப்பாக மகளுடன் இணைந்த உணர்ச்சி காட்சிகளில் அவர் காட்டும் ஈடுபாடு கவனிக்கத்தக்கது. ஆண்ட்ரியா, ஷாம் மற்றும் வில்லன் தரப்பில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களுக்கான பங்கினை நன்றாகவே செய்திருக்கின்றனர்.

சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரம் சுற்றி வரும் ட்விஸ்ட்கள் திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக படம் உறுதியான அடிப்படையில் நிற்கிறது. ஒளிப்பதிவு காட்சிகளுக்கு இயல்பான வண்ணத்தையும் தீவிரத்தையும் கொடுக்கிறது. எடிட்டிங் சுறுசுறுப்பாக அமைந்து, திரைக்கதையின் வேகத்தை தக்கவைத்திருக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளில் தூக்கி நிருத்தியிருக்கிறது. சொல்லப்போனால், ஜிப்ரானின் இசையே படத்திற்கு மிகப்பெரும் பலம் என்று கூற வைத்துவிடுகிறது.

பார்த்து அலுத்துப் போன கதை என்ற ஒரு குறை மட்டுமே, மற்றபடி லீடர் மாஸுக்கு பஞ்சம் இல்லா ஒன்றாகத்தான் வந்து செல்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button